டி.வி.யை ஒதுக்கவுமில்லை, காலையில் எழுந்து படித்ததும் இல்லை: முதலிடம் பெற்ற மதுரை மாணவி தீப்தி
மதுரை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவிகளில் ஒருவரான தீப்தி ஃபேஷன் டெக்னாலஜி படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் காலையில் எழுந்தது படித்ததில்லையாம்.
தமிழகத்தில் இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 9 மாணவிகள் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
அவ்வாறு முதலிடம் பிடித்தவர்களில் மதுரை அண்ணா நகரில் உள்ள பஸ்கோஸ் பள்ளி மாணவி தீப்தியும் அடக்கம். அவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்களும், மீதமுள்ள 3 பாடங்களில் 100க்கு 100ம் வாங்கியுள்ளார். அவரது தந்தை பாலாஜியும், தாய் மல்லீஸ்வரியும் மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தீப்தி கூறுகையில்,
அன்றன்று நடத்தும் பாடங்களை அன்றைக்கே படித்து முடித்துவிடுவேன். படித்ததை வீட்டில் உட்கார்ந்து எழுதிப் பார்ப்பேன். சக மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பேன். பிறருக்கு சொல்லிக் கொடுக்கையில் பாடங்கள் மனதில் நன்கு பதியும். முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக டிவி, பொழுதுபோக்கை ஓரங்கட்டவில்லை. மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை படித்தேன். காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இல்லை. எனக்கு ஃபேஷன் டெக்னாலஜி படிக்க ஆசை என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications