இந்தப் பொண்ணுங்க மட்டும் எப்படிப்பா எப்பப் பார்த்தாலும் பர்ஸ்ட் வர்றாங்க...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாஷ்.. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டைப் பார்த்ததும் அத்தனை பேரின் வாயிலும் இந்த வார்த்தைதான் முதலில் வந்திருக்கும். காரணம், தேர்ச்சியிலும் ரேங்கிலும் கலக்கி விட்டனர் மாணவிகள்.

முதலிடத்தில் 9 பேர்... 9 பேரும் மாணவிகள்.. என்ன ஒரு சாதனை. அதேபோல தேர்ச்சி சதவீதத்திலும் அதேபோல மாணவிகளே அதிகம். 2, 3வது இடத்திலும் மாணவிகளே அதிகம்.. எப்படி இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த முடிந்தது மாணவிகளால் என்ற ஆச்சரியம் கலந்த கேள்விதான் அத்தனை பேர் மனதிலும்.

இன்றுதான் என்றில்லை, என்றுமே மாணவிகள்தான் தொடர்ந்து தேர்ச்சியிலும், ரேங்க் பெறுவதிலும் முதலிடத்தைப் பிடித்து கோலோதச்சி வருகிறார்கள். மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் நிறைய காரணங்கள் மனதுக்கு தோன்றுகின்றன.

இயல்பிலேயே திறமை

இயல்பிலேயே திறமை

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு இயல்பிலேயே சில திறமைகள் கூடுதலாக உள்ளன.

புத்திசாதுரியம் - நிதானம்

புத்திசாதுரியம் - நிதானம்

ஆண்களை விட பெண்கள் புத்திசாதுரியம் மிக்கவர்கள். அதேபோல நிதானமாக எதையும் அணுகுபவர்கள்.

தெளிவு அதிகம் - குழப்பம் குறைவு..

தெளிவு அதிகம் - குழப்பம் குறைவு..

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அதிகம் குழம்ப மாட்டார்கள். ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் சட்டென தீர்வு காண்பதில் பெண்கள்தான் முதலிடத்தில் இருப்பார்கள்.

திசை திருப்பல்கள் குறைவு

திசை திருப்பல்கள் குறைவு

ஆண்களைப் பொறுத்தவரை நிறைய திசை திருப்பல்களுக்கு ஆளாகிறார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் ஆண்களுக்கு. அதேசமயம், பெண்களுக்கு அப்படி இல்லை. பள்ளிக்கூடம் முடிந்ததும், வீட்டுக்கு வந்தோமா, புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினோமா என்றுதான் 99 சதவீத மாணவிகள் இருக்கிறார்கள்.

கட்டாயம்

கட்டாயம்

மாணவர்களுக்கு இல்லாத இன்னொரு முக்கிய கட்டாயம் மாணவிகளுக்கு உள்ளது. அதாவது சரியாக படித்து நல்ல மார்க் வாங்காவிட்டால் தொடர்ந்து படிக்க வைக்க மாட்டார்கள், யாருக்காவது கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்கள் என்ற இயல்பான ஒரு சமூக கட்டாயம் மாணவிகளுக்கு இருக்கிறது. இதுவே அவர்களை நன்றாகப் படிக்கத் தூண்டி விடுகிறது.

கிரகிக்கும் தன்மை

கிரகிக்கும் தன்மை

மாணவர்களுடன் ஒப்பிடுகையில், மாணவிகளுக்கு கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளது. ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் சட்டென பிடித்துக் கொள்கிற கற்பூர புத்தி மாணவர்களை விட மாணவிகளுக்கே அதிகம்.இதுவும் கூட தொடர்ந்து அவர்கள் அதிக தேர்ச்சியை பெறவும், முதலிடம் பெறவும், ரேங்க் பெறவும் காரணம் என்று சொல்லலாம்.

அப்படியானால் இதெல்லாம் மாணவர்களிடம் இல்லையா என்று கேட்கலாம். மாணவர்களிடமும் இப்படிப்பட்ட திறமைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் அதை முறையாக சரியாக சேனலைஸ் செய்வதில்லை... கவனக்குறைவும், திசை திருப்பல்களும் அவர்களை பாழ் செய்து திசை திருப்பி விடுகிறது. ஆப்சன்ஸ் ஆப் மைன்ட் - ஆண்களுக்கு அதிகம் உள்ள ஒரு பிரச்சினை. இதுவும் கூட ஆண்களுக்கு, அதாவது மாணவர்களின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம் எனலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+