கனிமொழிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்

திமுக எம்.பி. கனிமொழிக்கு முஸ்லிம் அமைப்பு ஒன்றின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
உங்களிடம் தான் நிறைய பணம் உள்ளதே எங்கள் அமைப்பை வலுப்படுத்துவதற்கு அதில் குறிப்பிட்ட தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களது உயிருக்கு ஆபத்து.
எங்களது அமைப்பை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வலுப்படுத்த உள்ளோம். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். நாங்கள் சொல்கிறதை செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் கல்யாண சுந்தரம், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேற்று முன்தினம் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். இது குறித்து சென்னை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வரும் வேளையில் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications