தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. படித்து நொறுக்கிய மாணாக்கர்கள்!
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு 10ம் வகுப்புத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பின்னி எடுத்துள்ளனர். இப்படி ஒரு சாதனை, இப்படி ஒரு தேர்ச்சியை இதுவரை தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாறு கண்டதில்லை. அப்படி ஒரு சாதனையைப் படைத்து காலரை உயர்த்தி விட்டு நிற்கின்றனர் மாணவ, மாணவியர்கள்.
மாணவியர்களே அதிகம் பாஸ் என்று சொல்வது சர்க்கரைப் பொங்கல் இனிப்பாக இருக்கிறது என்பதற்குச் சமம். அது வழக்கமாக நடப்பதுதான்.
ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் மூன்று இடங்களில் ஏகப்பட்ட மாணவ, மாணவியர் பாய்ந்து வந்து பங்கு போட்டு பட்டையைக் கிளப்பியிருப்பது இதுவரை தமிழகம் கண்டிராதது.

3 இடங்கள்.. 187 மாணவ மாணவியர்
முதல் மூன்று இடங்களை மட்டும் 187 மாணவ, மாணவியர் பங்கு போட்டுள்ளனர். இது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்று.

மாணவியர்களின் அபார சாதனை
அதிலும் இந்த 187 பேரில் மாணவியர்களே அதிகம் என்பது இன்னொரு புதிய சாதனை.

முதல் இடத்தில் 9 மாணவியர்
அதேபோல முதல் இடத்தை இதுவரை இல்லாத அளவுக்கு 9 பேர் பெற்றுள்ளனர். அதை விட பெரிய சாதனை அந்த 9 பேரும் மாணவியர் என்பது.

9 பேரில் முதல்வர் அனுஷா
இருப்பினும் இந்த 9 பேரிலும் முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஈரோடு மாவட்ட மாணவி அனுஷா. இவர் தமிழில் அதிகம் மார்க் வாங்கியதால் இந்த சிறப்பு கிடைத்துள்ளது.

2வது இடத்தில் 52 பேர்
இதுவரை இல்லாத அளவுக்கு 2வது இடத்தை 52 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது தமிழகத்தில் இதுவரை நடந்திராதது.

3வது இடத்தில் 136 பேர்
அதேபோல 3வது இடத்தை 136 பேர் பெற்றுள்ளனர். இதுவும் ஒரு சாதனையாகும்.

பாஸானதிலும் சாதனை
மேலும் தேர்ச்சி விகிதமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட3 சதவீதம் பேர் கூடுதலாக பாஸாகியுள்ளனர். இந்த ஆண்டு இது 89 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாணவிகள் வரலாறு காணாத தேர்ச்சி
தேர்வு எழுதிய மாணவிகளில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வெறும் எட்டு சதவீதம் பேரே பெயிலாகியுள்ளனர். மாணவர்களில் 86 சதவீதம் பேரே பாஸாகியுள்ளனர்.

29,905 கணக்குப் புலிகள்
கணிதப் பாடத்தில் சென்டம் போடுவது, அதாவது நூற்றுக்கு நூறு வாங்குவதிலும் சாதனை. கடந்த ஆண்டு 1141 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கினர். ஆனால் இந்த ஆண்டோ தடாலடியாக பாய்ந்துவிட்டனர். மொத்தம் 29,905 பேர் நூற்றுக்கு நூறு போட்டுள்ளனர்.

அறிவியலில் அபாரம்
அதேபோல அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு வெறும் 9237 பேரே நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தனர். ஆனால் இந்த முறை 38,154 பேர் சென்டம் போட்டுள்ளனர்.

சமூக அறிவியலிலும் சாதனை
சமூக அறிவியல் பாடத்தில் கடந்த முறை 5305 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 19,680 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
நிச்சயம் வாயார பாராட்டியே ஆக வேண்டும் இந்த மாணவ் செல்வங்களைப் பெற்ற உள்ளங்களை....
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications