அரசை விமர்சித்த ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சரின் பதவி பறிப்பு

ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தனது அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் இரவு தான் அவர் ஊர் திரும்பினார். இந்நிலையில் அரசு திட்டங்களை விமர்சித்த காரணத்திற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எல். ரவீந்திர ரெட்டியை நேற்று இரவு பதவி நீக்கம் செய்தார்.
ரவீந்திர ரெட்டிக்கு ஏற்பட்ட நிலை மேலும் 1 அல்லது 2க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு விரைவில் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ரவீந்திர ரெட்டி தனது குடும்பத்தாருடன் லண்டில் உள்ளார். அவர் வரும் 4ம் தேதி ஆந்திரா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரண் குமார் ரெட்டி முதல்வரானபோது கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.வான ரவீந்திர ரெட்டி அமைச்சராக்கப்பட்டார்.
ஆனால் அவர் முதல்வரைப் பற்றி கடுமையாக விமர்சிக்கத் துவங்கினார். முதல்வரின் செயல்பாடுகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து வெளிப்படையாக குற்றம் சாட்டினார். முன்னதாக அரசையும், அரசு திட்டங்களையும் விமர்சித்ததற்காக பி. சங்கர் ராவ் அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications