விசாரணை முடியும் வரை சீனிவாசன் விலகல்- அதுவரை டால்மியா தலைவர்!

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து ராஜீவ் சுக்லா பதவி விலகி விட்டார். பிசிசிஐ செயலாளர் பதவியிலிருந்து ஜெகதாலே விலகினார். தொடர்ந்து பலர் பதவி விலகி விட்டனர். இதனால் சீனிவாசனுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் கிரிக்கெட்வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. பிற்பகலில் தொடங்கிய கூட்டம் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
இதில் முக்கிய உறுப்பினர்களான ராஜீவ் சுக்லா, ஜேட்லி ஆகியோர் பங்கேற்கவில்லை.மாறாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், குருநாத் மெய்யப்பன் விவகாரம், ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மேலும் சீனிவாசன் விலகல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது ஒருதிட்டத்தை சீனிவாசன் முன்வைத்தார். அதாவது விசாரணை முடிவடையும் வரை தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது, இடைக்காலத் தலைவரை நியமித்து வாரியத்தை நடத்துவது, விசாரணை முடிவில் தானும், தனது மருமகனும் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் மீண்டும் தலைவர் பொறுப்பை தான் ஏற்பது என்பதே சீனிவாசனின் திட்டம்.
ஆனால் இதற்கு சுக்லா, ஜேட்லி போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. சிலர் ஆதரித்ததாக தெரிகிறது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சீனிவாசனின் கடும் பிடிவாதம் காரணமாக அவரது திட்டமே வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது விசாரணை முடியும் வரை சீனிவாசன் ஒதுங்கியிருப்பது எனவும், அதுவரை நிர்வாகத்தை ஜக்மோகன் டால்மியா நடத்துவது எனவும் தீர்மானமாகியுள்ளதாம். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
புதிய சமரசத் திட்டத்தின்படி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் சீனிவாசன். அதேசமயம்,நிர்வாகதிதல் அவர் ஈடுபட மாட்டார். விலகி இருப்பார். அவருக்குப் பதில் டால்மியா தலைமையிலான ஒரு நிர்வாகக் குழு தனியாக நியமிக்கப்பட்டு நிர்வாகத்தை நடத்தும்.
ஊழல் புகாரில் சிக்கியவர் டால்மியா
இடைக்காலத் தலைவராகியுள்ள ஜக்மோகன் டால்மியா, பெரும் ஊழல் புகாரில் சிக்கியவர் ஆவர். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் இவர்.
இந்த நிலையில் தற்போது இவரை மீண்டும் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். இவரது பெயரை அருண் ஜேட்லியும், அனுராக் தாக்கூரும் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications