சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்.. அண்ணா சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட இளைஞர்
சென்னை: சென்னையில் இன்று காலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டார்.
ராணி சீதை ஹால் அருகே இந்த சம்பவம் நடந்தது.அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை ஒரு கும்பல் ஆட்டோவில் துரத்தி வந்தது.
இதைப் பார்த்த அந்த வாலிபர் பைக்கை விட்டு விட்டுஇறங்கி ஓடினார். இதையடுத்து ஆட்டோவில் இருந்து குதித்த 3 பேர் அந்த நபரை துரத்தினர். பின்னர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.
உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்ததால் அந்த நபர் அலறியபடி கீழே விழுந்தார். இதைப் பார்த்து சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
தகவல் அறிந்ததும் ஆயிரம் விளக்கு போலீஸார் விரைந்து வந்தனர். அந்தநபரை மீட்டு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெட்டப்பட்ட நபரின் பெயர் கென்னத். கோயம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள ஜெப கூடத்துக்கு பிரார்த்தனைக்கு வந்துள்ளார். அப்போது தான் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் கென்னத்தை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications