இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கருணாநிதி தான்: வைரமுத்து புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி கலைஞர் - 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று காமராஜர் அரங்கில் முத்தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை கருணாநிதி பார்வையாளர்களில் ஒருவராக இருந்து பார்த்தார்.
கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது,
இந்தியாவில் ஆளும்திறன் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான். ஒரு காலத்தில் வழிபாடு மற்றும் உணர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மொழி திராவிட இயக்கம் வந்த பிறகு போர்க்கருவியாக மாறியது. அடக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த கலைஞர் தனது எழுதுகோலால் மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். சுவாசம் இருக்கும் வரை இதயம் துடிக்கும். பூமி சுற்றும் வரை ஈர்ப்பு இருக்கும். அதுவரை கருணாநிதி தடம் பதிப்பார் என்றார்.
இயல் தமிழ் என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியனும், இசை தமிழ் என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனியும், நாடகத் தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் அருள்மொழியும் உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக பொருளாளர் முக ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications