அவதூறு வழக்கு: திருப்பூர் கோர்ட்டில் விஜயகாந்த், பிரேமலதா ஜூலை 2ல் ஆஜராக உத்தரவு

கடந்த 12-ந் தேதி திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மைதானத்தில் திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 03.06.2013 திங்கள்கிழமை வழக்கு தொடர்ந்தார்.
அதில் கடந்த மாதம் 12-ந்தேதி திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் ரவீந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம், மாநில பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் வழக்கு விசாரணைக்காக விஜயகாந்த், பிரேமலதா, ரவீந்திரன், கீர்த்தி சுப்பிரமணியம், இளங்கோவன் ஆகிய 5 பேரும் ஜூலை 2ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications