கல்யாணம் ஆகல... ஆனா குழந்தை இருக்கா? கட்டுங்க வரி.. இது சீன கலாட்டா!
பீஜிங்: திருமணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் சீனப் பெண்களுக்கு அங்கு பெரும் அபராதம் விதிக்கப்படவுள்ளது.அதிக அளவில் அபார்ஷன் மற்றும் குழந்தைகளை தூக்கி வீசி விடும் செயல்கள் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த அபராத முறையை அங்கு கொண்டு வந்துள்ளது சீன மாகாண அரசு ஒன்று.
இதுதொடர்பான புதிய சட்டம் ஹூஹான் மாகாணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், திருமணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு சமூக பராமரிப்பு நிதி என்ற பெயரில் அபராதம் வசூலிக்கப்படும்.
அதேபோல ஏற்கனவே திருமணமான நபருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் திருமணமாகாத பெண்களிடமும் இந்த நிதி வசூலிக்கப்படும்.

சமூக பராமரிப்பு நிதி...
இவர்களுக்கு ஹூஹான் மாகாணத்தின் வருடாந்திர தனி நபர் வருமானத்தைப் போல ஆறு மடங்கு அபராதம் நிதியாக வசூலிக்கப்படும். அதாவது 26,407 டாலர். இந்திய மதிப்பில் இது ரூ. 14,96,352 ஆகும்.

சட்ட விரோதம்...
சீனாவைப் பொறுத்தவரை திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது சட்டவிரோதமான, முறையற்ற செயலாகும். அதேபோல திருமணமானவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு குழந்தை பெறும் பெண்களும் அங்கு அதிகரித்து வருகின்றனராம்.

பாவம் தளிர்கள்...
இப்படிப்பட்ட பெண்கள் குழந்தைப் பேறை எதிர்பாராமல் அபார்ஷனில் குதிக்கிறார்கள். அல்லது குழந்தைகளை அனாதரவாக விட்டு விடுகின்றனராம்.

அம்மாடியோவ்....
சீனாவில் வருடத்திற்கு 13 மில்லியன் அபார்ஷன் நடக்கிறதாம். இவற்றில் பெரும்பாலும் திருமணமாகாத பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமானது.

இதெல்லாம் வேஸ்ட்டுங்க...
ஆனால் தற்போதைய புதிய சட்டத்தால் பெரிய அளவில் பலன் இருக்காது என்றும் அபார்ஷன் மேலும் அதிகரிக்கும் என்றும் பெண்கள் அமைப்பினர் கவலை தெரிவிக்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications