விஜயகாந்த்தின் கேப்டன் டிவி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

சென்னை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் கேப்டன் டி.வி.க்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கேப்டன் டி.வி.யில் கடந்த 11.12.2012 அன்று மதியம் 1 மணி அளவில் செய்தி ஒளிபரப்பானது. அதில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போயஸ் கார்டனில் சிறு வீட்டில் வசித்த ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆன பிறகு பக்கத்து வீடுகளையெல்லாம் வாங்கி பெரிய வீடாக மாற்றினார். கிண்டியில் ஏராளமான நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளார். கொடநாட்டில் மிகப் பெரிய எஸ்டேட் வாங்கி அதில் தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்துள்ளார். ஹெலிகாப்டர் தளத்தை போல கொட நாட்டிலும் அமைத்துள்ளார் என்று செய்தி வாசிக்கப்பட்டது.
இந்த செய்தி உள் நோக்கத்துடனும் முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த செய்தியை வாசித்த செம்மலூர் ரமேஷ், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன், நாராயணன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications