வாய்தா கேட்ட விஜயகாந்த்.. கோபமான நாகர்கோவில் நீதிபதி!

Subscribe to Oneindia Tamil

Judge orders Vijayakanth to appear in person without fail
நாகர்கோவில்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்த் ஜூலை 1ம் தேதி கண்டிப்பாக ஆஜாராக வேண்டும் என நாகர்கோவில் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகர்கோவில் நாகராஜா திடலில் 4.10.2012ல் நடந்த தேமுதிக பொது கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் ஞானசேகரன் குமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு மீண்டும் வந்தது. இந்த வழக்கு விசாரணையில் இதுவரை விஜயகாந்த் நேரில் ஒருமுறை கூட ஆஜராகவில்லை. நேற்றும் அவர் விசாரணைக்கு வரவில்லை. அவரது சார்பில் தேமுதிக வக்கீல் பொன்செல்வன் ஆஜாராகி 2 மனுக்கள் தாக்கல் செய்தார்.

அதில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடப்பதால் இந்த முறை விஜயகாந்த் வரவில்லை என ஒரு மனுவிலும், இன்னொரு மனு வாய்தா கேட்டு தாக்கல் செய்யப்பட்டது.

இதனால் கோபமடைந்த நீதிபதி தேமுதிக வக்கீலை பார்த்து உங்கள் கட்சி தலைவர் விஜயகாந்த் அடுத்த விசாரணையின் போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இதற்கான தேதியை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கண்டிப்பாக கூறினார்.

இதுகுறித்து கட்சி தலைமையிடம் பேசி விட்டு கூறுவதாக தெரிவித்து விட்டு தலைமையை தொடர்பு கொண்டு பேசி விட்டு 1.7.2013 அன்று கண்டிப்பாக அவர் நேரில் ஆஜராவார் என நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து வழககு விசாரணை 1.7.2013 அன்று ஓத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் விஜயகாந்த் கண்டிப்பாக ஆஜாராக வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+