25 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை… மீனவர்களை ஓட ஓட விரட்டி அட்டூழியம்
சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 785 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் 24 மீனவர்கள், மற்றும் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீன்பிடித்து கரை திரும்பிக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களுடன் 5 விசைப்படகுகளையும் அவர்கள் சிறைபிடித்து சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஊர்க்காவல் துறை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓட ஓட விரட்டினர்
தங்களை விரட்டியடித்த இலங்கைக் கடற்படையினர் வலைகளையும், மீன்களையும் அபகரித்துக் கொண்டதாக தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த 2 நாட்களில் மட்டுமே ராமேஸ்வரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications