ஆந்திர சிறுமி கற்பழிப்பு: விபச்சார கும்பல் தலைவி பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மசாஜ் கிளப் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்த பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ரிஸா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு பாபநாசத்தைச் சேர்ந்த ஆஷா என்ற காயத்ரி தேவி சினிமா ஆசை காட்டி திருச்சிக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளிவிட்டார். ரூ.30,000 பணம் கொடுத்து சிறுமியை சீரழித்த துறையூர் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளரும், ஒன்றியக் குழு தலைவருமான பொன். காமராஜ், அவரது டிரைவர், சேலம் பகுதியை சேர்ந்த சக்திவேல், பிரபு, வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் நஜிமுல் மற்றும் ஆஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் ஒரு விபச்சார கும்பலே உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து விபச்சார கும்பலின் தலைவி சேலம் கே.ஆர். புரத்தைச் சேர்ந்த கவிதா(45) என்பவர் நேற்று திருச்சி கண்டோன்மென்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் திருச்சி கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது,

கவிதா மசாஜ் கிளப் வைத்து நடத்துகிறேன் என்ற பெயரில் விபச்சார தொழில் செய்து வந்துள்ளார். அவர் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கே.ஆர்.புரத்தில் மசாஜ் கிளப் நடத்தி வந்துள்ளார். அங்கு வந்த ஆண்களிடம் பெண்கள் மசாஜ் செய்துவிடும் வசதி உள்ளது என்று தெரிவித்துள்ளார். பெண்கள் மசாஜ் செய்துவிட சம்மதிக்கும் ஆண்களிடம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை வசூலித்துள்ளார்.

பின்னர் பெண்கள் கைப்பட்டதில் மயங்கி அடிக்கடி வரும் ஆண்களிடம் கூடுதல் பணம் கொடுத்தால் உல்லாசமும் உண்டு என்று கூறியிருக்கிறார். அவரின் பேச்சைக் கேட்டு பல ஆண்கள் மயங்கியுள்ளனர். அவர்கள் உல்லாசம் அனுபவிக்க பல அழகிகளை பயன்படுத்தியுள்ளார் கவிதா. மேலும் மசாஜ் கிளப்பிற்கு வந்த குடும்ப பெண்களுக்கு பண ஆசை காட்டி அவர்களையும் மசாஜ் செய்ய வைத்துள்ளார். இந்நிலையில் அவர் மசாஜ் கிளப்பில் நடக்கும் லீலைகள் குறித்த தகவல் கசிய ஆரம்பித்தது. இதையடுத்து அவர் மசாஜ் கிளப்பை மூடினார்.

கவிதாவின் செயல்கள் பிடிக்காமல் அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து கவிதா வீட்டில் இருந்து கொண்டே பல அழகிகளை விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது வாடிக்கையாளர்களாக இருந்த சக்திவேல் மற்றும் பிரபு ஆகியோர் கவிதாவின் உதவியாளர்களாகிவிட்டனர்.

ஆஷாவும் கவிதாவிடம் வேலைக்கு சேர்ந்து பின்னர் விபச்சாரத்தில் அவருக்கு உதவி செய்து வந்தார். இந்நிலையில் கவிதாவின் அறிவுரையின்பேரில் ஆந்திராவுக்கு சென்ற ஆஷா அங்கு ரிஸாவை சந்தித்து சினிமா ஆசை காட்டி அவரை சேலத்திற்கு அழைத்து வந்து கவிதாவிடம் விட்டார். ரிஸாவை பார்த்த கவிதா அவரை வைத்து பல லட்சம் சம்பாதிக்க திட்டமிட்டார். இதையடுத்து தான் அதிமுக நிர்வாகி காமராஜுக்கு புதுவரவு குறித்து தெரிவித்து ரூ.30,000 பணத்தை வாங்கிக் கொண்டு சிறுமியை அனுப்பி வைத்தார்.

ஆனால் ரிஸா தப்பித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் மொத்த கும்பலும் சிக்கியது. கைதாகியுள்ள விபச்சார கும்பல் பல செல்போன்களை பயன்படுத்தியுள்ளது. அந்த செல்போன்களில் வாடிக்கையாளர்களின் எண்கள் உள்ளன. அதனால் எந்த நேரம் சிக்குவோமோ என்ற கலக்கத்தில் பலர் செல்போனை சுவிட் ஆப் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+