சஸ்பென்ட் விவகாரம்: தேமுதிக எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி
மதுரை: தமிழக சட்டசபையில் இருந்து 6 மாத காலத்துக்கு தாங்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்த்டின் மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 பேர் கடந்த மார்ச் 25-ந் தேதி 6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே மனுவாகத் தாக்கல் செய்தனர். தங்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை சட்டவிரோதமானது. ஆகவே, சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த மனுவுக்குப் பதில் மனுத் தாக்கல் செய்த சட்டசபை செயலர், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சரியே எனக் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இம் மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நேற்று விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தார்.அவர் தமது தீர்ப்பில், ராஜாராம் பால் என்பவரால் தொடரப்பட்ட இதேபோன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், ஏ.கே.போஸ், விஜயகாந்த் ஆகியோரால் தொடரப்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த 3 வழக்குகளின் தன்மையும், தற்போதைய வழக்கின் தன்மையும் ஒரே மாதிரியானது. இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்த அதே நிலையை இந்த வழக்கிலும் எடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications