அகஸ்தியர் அருவியில் ஆபத்தான பகுதிகளால் குளிக்க தடை

Subscribe to Oneindia Tamil

பாபாநாசம்: பாபநாசம் அகஸ்தியர் அருவியில் உள்ள ஆபத்தான குழிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இப்பகுதியில் ஆழமான பகுதிகள் அதிகம் உளளது. இதில் சுற்றுலா பயணிகள் தெரியாமல் இறங்கி குளிக்கும் போது சுழலில் சிக்கிஇறந்து போகின்றனர். இதனால் பாபநாசம் தலையணையில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்ற குளிக்கவும், அகஸ்தியர் அருவியில் உள்ள தாடகத்தில்

குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் ஓலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர் போலீசார். இதனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் விழிப்புணர்வுடன் குளித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள் அருவிகளில் குளித்து செல்வர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் சிலர் கூறுகையில், நாங்கள் பல வருடங்களாக இங்கு குளிக்க வருகின்றோம். இதனால் எங்களுக்கு இந்தஇடங்கள் குறித்து ஓரளவுக்கு நன்றாக தெரியும். எங்களையாவது குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனால்

காவல்துறையினரோ உளளூர், வெளியூர் என்று எங்களால் பார்க்க முடியாது. விதிமுறைகள் அனைவருக்கும் பொதுதான் என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+