ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும்.. 77 வயது வக்கீல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அந்த வக்கீலின் பெயர் பி.ஆர்.கிருஷ்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது...:
நாட்டின் தென்பகுதிக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். சுதந்திரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.
இப்படி தென்பகுதிக்கு அரசியல் அநீதி இழைக்கப்படுவதற்கு, இன்னும் நாம் ஆங்கிலேயர்களின் அமைச்சரவை மாதிரிகளை பின்பற்றுவதே காரணமாகும். இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் நீதியாக அமையும்.
ஆனால் தற்போதுள்ள ஆங்கில அமைச்சரவை மாதிரியின்படி இதற்கு வாய்ப்பில்லை. இதனால் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம், அனைவருக்கும் அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.
எனவே, ஆங்கிலேயர்களின் அமைச்சரவை முறையை பின்பற்றி, இந்தியாவின் தென்பகுதிக்கு அரசியல் அநீதியை ஏற்படுத்துவது, அரசியல் சாசனத்தின் 38-வது பிரிவை மீறுவது போன்றதாகும்.
இந்த தொடர் மீறுதல் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, அரசியல் சாசனத்தில் தகுந்த திருத்தங்களை கொண்டு வந்தால், அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்படும். இதை நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டும்.
அமைச்சரவை மாதிரியை மாற்றுவதற்கான மறுசீராய்வு கமிஷனை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்டதிருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7-ந்தேதி மனு கொடுத்தேன்.
அதில், ‘இந்தியாவின் தென்பகுதி மாநிலத்தவருக்கும் அரசியல் சம உரிமை கிடைக்கும் வகையில் அரசியல் சாசனம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் அநீதி இழைக்கும் ஆங்கிலேய மந்திரி சபை முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவை அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத் தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை, மக்களுக்கு முன்னரே தகவலாக அளிக்கிறேன்' என்று கூறியிருந்தேன்.
எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணன்.
இதை விசாரிக்கலாமா, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயன் இன்று விசாரித்து நடவடிக்கை எடுப்பர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications