இன்னும் நிறையப் பேர் இருக்காங்க, அம்புட்டு பேரும் அதிமுகவுக்கு வருவாங்க - சுந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

Many more DMDK MLAs will come to ADMK, says Sundararajan
சென்னை: தேமுதிகவில் மாஃபா பாண்டியராஜன் மாதிரி நிறையப் பேர் இருக்காங்க. அவங்களும் விரைவிலேயே அதிமுகவுக்கு வருவாங்க என்று கூறியுள்ளார். முதல் நபராக தேமுதிகவிலிருந்து வெளியேறிய சுந்தரராஜன் எம்.எல்.ஏ.

லேட்டஸ்டாக ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுக அரசைப் பாராட்டி விட்டு வந்துள்ள மாஃபா பாண்டியராஜன் குறித்து சுந்தரராஜன் எம்.எல்.ஏ. கூறுகையில்,

மக்கள், மனசாட்சி, தெய்வத்தை நம்புகிறேன். அரசு விழாக்களில் பங்கேற்கிறோம். முதல்வரின் செயல்பாடு குறித்து மனதாரப் பாராட்டி வாழ்த்தி பேசுகிறோம்.

சட்டசபையில் முதல்வரை பாராட்டினால், தே.மு.தி.க., எம்.எல். ஏ.,க்கள், எங்களை தாக்குகின்றனர். அவர்களில் பலர் அரசுக்கு நன்றி தெரிவித்து பேசுகின்றனர்; அவர்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா.

முதல்வரை பாராட்டி பேசும் எங்களை, ஏன் கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்யவில்லை. தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சியை போல், தைரியமாக எங்களை கட்சியை விட்டு தூக்க வேண்டியது தானே. என்னை உதிர்ந்த ரோமம் என அந்தம்மா கூறினார்.

விஜயகாந்த் தலைவராக வருவதற்கு, எனது பங்களிப்பு, ஒரு துளி உள்ளது. அந்த துளி எந்த மாதிரி என்பது, நேரம் வரும்போது கூறுவேன். நன்றி கெட்டவர்களிடம் இருந்தது, மிகப்பெரிய பாடம் கற்று கொடுத்து விட்டது. ராஜ்யசபா தேர்தலின் போது, ஓட்டளிப்பது குறித்து முடிவெடுப்போம்.

அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள், எனது தலைமையின் கீழ் செயல்படுவார்களா, என்பது குறித்து எனக்கு தெரியாது. தே.மு.தி.க., வில், உண்மையான தொண்டனுக்கு மதிப்பில்லை. எனவே, அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள், இன்னும் நிறைய பேர் வருவார்கள். நாங்கள், முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை பின்பற்றி நடப்போம்''என்று கூறினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+