ஐபிஎல் பெட்டிங்: ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஜாமீன் கிடைத்தது

சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் ஐபிஎல் போட்டிகள் பெட் கட்டியது மற்றும் தரகர்களை தங்கள் ஹோட்டலில் தங்க வைத்தது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரிடம் கடந்த 31ம் தேதி மும்பை போலீசார் விசாரணை செய்தனர். அதன் பிறகு கடந்த திங்கட்கிழமை அவர் சென்னையில் உள்ள குற்றப் பிரிவு போலீசார் முன்பு ஆஜாரானார். அவரை விசாரித்த போலீசார் கைது செய்தனர்.
தங்கள் கஸ்டடியில் வைத்து 2 நாட்கள் விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை நேற்று புழல் சிறையில் அடைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சில மணிநேர சிகிச்சைக்குப் பிறகு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications