'நமீதா'வுடன் ஐரோப்பாவில் ரவுண்ட் அடிக்கும் டோணி மனைவி
கேப்டன் டோணி இங்கிலாந்தில் படு பிசியாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது மனைவி சாக்ஷி, ஐரோப்பிய நாடுகளில் ஜாலியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறாராம்.
சாக்ஷி தனியாக போகவில்லை. அவருடன் 2 தோழியரும் உடன் சென்றுள்ளனர்.
ஒருவர் டெல்லியைச் சேர்ந்த பெண் ஜோசியர் நமீதா வதேரா. இன்னொருவர் பிரபுல் படேல் மகள் பூர்ணா.

ஐபிஎல்லில் கூடவே வந்த சாக்ஷி

பேசப்பட்ட கவர்ச்சி
டோணியின் ஆட்டத்தை விட அதைக் காண வந்த சாக்ஷி குறித்தும், அவரது ஓவர் மேக்கப் குறித்தும், கவர்ச்சி குறித்துமே மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

இங்கிலாந்து வந்து டூர் கிளம்பினார்
டோணி இங்கிலாந்து கிளம்பியபோது அவருடன் கூடவேதான் வந்தார் சாக்ஷி. ஆனால் அங்கிருந்து தனது தோழியருடன் தனியாக டூர் கிளம்பி விட்டார்.

சைட் சீயிங்
போலந்திலிருந்து அவது டூர் தொடங்கியதாம். கிராகோ, வார்சா ஆகிய நகரங்களுக்குப் போன இந்த மூன்று பேரும், தற்போது பாரீஸ் நோக்கி பயணிக்கிறார்களாம்.

நமீதா ஏன்...
பிரபுல் படேல் மத்திய அமைச்சராக இருப்பவர். அவரது மகள் பூர்ணா, சாக்ஷியின் தோழி. ஆனால் பெண் ஜோசியர் நமீதா ஏன் உடன் போயுள்ளார் என்பதுதான் பலரின் ஆச்சரியம்.












Click it and Unblock the Notifications