குற்றாலத்தில் படகு போக்கு வரத்து: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலம்: குற்றாலம் படகு குழாமில் படகுகள் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஐந்தருவிக்குசெல்லும் வழியில் உள்ள படகு குழாமில் படகு சவாரி நடந்து வருகிறது.
குற்றாலம் சீசன் தொடர்ந்து களைகட்டி வரும் நிலையில் அருவிகளில் தண்ணீர்அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.வெண்ணமடை குளத்தில் தண்ணீர் வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து படகு சவாரிக்காக கடந்த ஒரு வாரகாலமாக படகுகளை புதுப்பித்து பெயிண்ட் அடிக்கும் பணியும் நடந்துவந்தது. இப்பணிகள் நேற்றுடன் முடிந்த நிலையில் குற்றால சீசனில் படகுசவாரிக்காக 18 படகுகள் பயன்படுத்தும் வகையில் அதற்கான பணிகள்துரிதப்படுத்தப்பட்டு விடுமுறை தினமான இன்றுமுதல் படகு குழாமில் படகுசவாரி தொடங்கப் பட உள்ளது.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்செந்தூர் பாண்டியன்,சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் ,மாவட்டஆட்சிதலைவர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படகு போக்குவரத்தை தொடக்கி வைக்கின்றனர். படகுப் போக்குவரத்துக்கான கட்டணங்களையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் நிர்ணயம் செய்துள்ளது.

அடிப்படை வசதிகள் தேவை
இதனிடையே குற்றாலத்தில் பெண்கள் குளித்துவிட்டு உடை மாற்றிட போதிய இட வசதி,பாது கப்பு வசதி ,வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்திட மாற்று ஏற்பாடு,அருவிக் கரையில் குடிநீர் வசதி ,மருத்துவ வசதி என எந்த அடிப்படை வசதியும் இங்கு செய்யப் படவில்லை. நீச்சல் குளத்தில் மேற்க் கூரை இன்னும் சரி செய்யப் படவில்லை இப்படி பல குறைகள் குற்றாலத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மாற்று நடவடிக்கை
இந்த நிலையில் மெயின் அருவி பகுதியினைஎம்.எல்.ஏ., சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
சரத்குமார் கூறியதாவது:
மெயின் அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் துணிகள் துவைப்பதற்கு தடை விதிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. அருவியின் பசுமையினை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் குற்றாலம் மெயின் அருவியில் துணிகள் துவைப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்வது தொடர்பாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருடன் ஆலோசிக்கப்படும். இது தொடர்பான நடவடிக்கை எடுக்க உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

சரத்குமார் ஆலோசனை
அருவிக்கரை பகுதிக்கு வந்த எம்.எல்.ஏ., வை பார்க்க சுற்றுலா பயணிகள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். அருவிக்கரை பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எம்.எல்.ஏ., சரத்குமார் பஞ்.,தலைவர் லதா மற்றும் அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆலோசனை மேற்கொண்டார். குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஈடாய்லெட் செயல்படாமல் இருப்பது குறித்து டவுன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications