மக்கேனைத் தொடர்ந்து சி.பி.ஜோஷியும் ராஜினாமா - நாளை அமைச்சரவை மாற்றம்

இதைத் தொடர்ந்து நாளை அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் அஜய் மக்கேன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ஆனார்.
அவர் கட்சி பணியாற்ற தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அவருக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டால் அவர் டெல்லியின் அடுத்த முதல்வர் ஆகும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. ஷீலா தீட்சித் கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி முதல்வராக இருந்து வருகிறார். ஒரு பெண் தொடர்ந்து 3 முறை ஒரு மாநிலத்தின் முதல்வராகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கேனைத் தொடர்ந்து இன்று சி.பி.ஜோஷியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து நாளை அமைச்சரவை மாற்றம் இடம் பெறுகிறது. நாளைய அமைச்சரவை மாற்றத்தில், நான்கு கேபினட் அமைச்சர்கள் மற்றும் நான்கு இணை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியிலும் நிர்வாக ரீதியாக பெரும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு நிகழக் கூடிய கடைசி அமைச்சரவை மாற்றமாக நாளைய அமைச்சரவை மாற்றம் வர்ணிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications