வாஜ்பாய், அத்வானி காலம் மலையேறி விட்டது- நிதீஷ் குமார்
Subscribe to Oneindia Tamil

பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 17 வருட கூட்டணி முடிவடைய பாஜகதான் காரணம். பாஜக தனது கட்சியின் மூத்த தலைவர்களுக்கே துரோகம் செய்த கட்சியாக மாறியுள்ளது.
நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறியது, பாஜகவின் தோல்வியாகும். அப்படிப்பட்ட நிலையை உருவாக்கியது நீங்கள்தான். நாங்கள் இல்லை. கட்டாயத்தின் பேரில் எந்த கூட்டணியும நீடிக்க முடியாது.
பாஜகவில் அத்வானி, வாஜ்பாய் காலம் முடிந்து விட்டது. புதிய தலைமைக்கு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தலைமையுடன் நாங்கள் ஒத்துப் போக வேண்டிய அவசியமில்லை.
அவசரப்பட்டு நாங்கள் கூட்டணியை முடிக்கவில்லை. இது அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல. தீவிரமாக பரிசீலித்த பின்னரே எடுத்தோம். சரியான நேரத்தில்தான் முடிவெடுத்துள்ளோம்.
இதற்கு மேலும் காத்திருப்பது எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்வதாக அமையும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications