இப்போதைக்கு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்

இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஹராங்கி, கபினி, ஹேமாவதி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் குறைந்தபட்ச அளவை விட குறைவாகத் தான் தண்ணீர் உள்ளது. தண்ணீர் பிரச்சனை பெரிதாகி உள்ளது. வரும் மாதங்களில் பெங்களூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கவே அரசு சிரமப்படலாம். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு நான் எதிராக இல்லை. ஆனால் தற்போதைக்கு தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பில்லை.
எங்கள் மாநிலத்திலேயே குடிநீர் தட்டுப்பாடாக இருக்கையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் தமிழகத்திற்கு எப்படி 1.2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடியும்?
கர்நாடகத்தின் பிரச்சனையை தமிழகம் புரிந்து கொண்டு தண்ணீர் கேட்டு வலியுறுத்தாமல் இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முடிவுகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக அரசு கூறுவது போன்று நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என்றார்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications