மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போலீஸ் திடீர் தடை.. வழக்குப் போட்டது திமுக
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக நலத் திட்ட உதவிகள் வழங்கும் கூட்டத்துக்கு காவல்துறை திடீரென தடை விதித்ததால், திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாளையொட்டி இன்று மாலை 1000 பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 1 கோடி மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சிக்காக பிரமாண்ட மேடையும், வரவேற்பு வளைவுகளும், மின் அலங்காரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி இக்ட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்து விட்டது காவல்துறை.
இது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீஸார் தடை விதித்துள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications