கோவில் விழாவில் குண்டக்க மண்டக்க டான்ஸ்.. 2 ஊர் நாட்டாமைகள் உள்பட பலர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கவர்ச்சிகரமான பெண்களை வைத்து சினிமாப் பாட்டுக்கு ஆபாச டான்ஸ் ஆட வைத்த இரண்டு ஊர் நாட்டாமைகள் உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பில்லியானூர் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா நடந்தது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக பாடல்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர்.
அப்போது, திரைப்பட பாடல்களுக்கு ஏற்றபடி ஆண்கள் பெண்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. ஒரு கட்டத்தில், அழகிகள் மட்டும் நடனமாடிய ஆபாச நடனங்கள் இடம் பெற்றிருந்தது.
இதைப் பார்த்த பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கூசிப் போயினர். இதுகுறித்து போலீஸாருக்குப் புகார் போனது. உடனே போலீஸார் விரைந்து வந்தனர். ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்தது நாட்டாமை சின்னத்தம்பி, பிரபு, ராஜா ஆகியோர் என்று தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதேபோல, இதேபோல, போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் கோவில் திருவிழாவிலும் ஆபாச நடனம் போட்டிருந்தனர். இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த நாட்டாமைகள் அன்பு, சரவணன், வெங்கடேசன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
மேலும் 6 அழகிகள் உள்பட 16 பேரும் கைதானார்கள். கைது செய்யப்பட்ட 21 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அத்தனை பேரும் சிறையில் அடைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications