இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி: குன்னூரில் மதிமுக, வி.சி போராட்டத்தால் பதற்றம்
குன்னூர்: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இருக்கும் இந்திய ராணுவ பயிற்சி முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதைக் கண்டித்து ம.தி.மு.க.,- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரியில் கடந்த 27-ந்தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 63 ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் அவர்களை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வெலிங்டன் ராணுவமுகாமை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் உருவானது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈÞவரன், மாவட்டச் செயலாளர்கள் நீலகிரி அட்டாரி நஞ்சன், கோவை மாநகர் ஆர்.ஆர்.மோகன்குமார், கோவை புறநகர் குகன் மில் செந்தில், டாக்டர் வரதராஜன், ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் உள்ளிட்ட கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும், ஈழத் தமிழர் உரிமை காக்கும் உணர்வாளர்களும், வணிகப் பெருமக்களும், மாணவர்களும் ஆயிரக் கணக்கில் பங்கேற்கேற்று கைதானார்கள்.
இதன் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சி குழுவுடன் கூடி விவாதித்துவிட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் உணர்வாளர்கள், அரசியல் கட்சியினரின் போராட்டம் காரணமாக ராணுவ முகாம் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ முகாமுக்கு முன்பாக தடுப்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் ராணுவ முகாம் வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications