இந்தியா சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்.சீனிவாசன்!

லண்டனில் வரும் 25-ந் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறை பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த டி.ஆர்.எஸ். முறைக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக என்.சீனிவாசன் கலந்து கொள்கிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக என்.சீனிவாசன் பதவியில் இருந்தார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சீனிவாசன் ஒதுங்கி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்புகளை ஜக்மோகன் டால்மியா நிர்வகித்து வருகிறார். ஆனால் தற்போது லண்டனில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்துக்கு இந்தியாவின் பிரதிநிதியாக என்.சீனிவாசனே செல்ல இருக்கிறார். அவர் டி.ஆர்.எஸ். முறைக்கான இந்தியாவின் எதிர்ப்பைப் பதிவு செய்ய இருக்கிறார்.
இதனிடையே நாளை சீனிவாசனை ஜக்மோகன் டால்மியா உள்ளிட்ட மூன்று புதிய நிர்வாகிகள் சந்திக்க இருக்கின்றனர். இவர்கள் மூவருமே சீனிவாசனின் லண்டன் பயணத்தை எதிர்க்கமாட்டார்கள் என்றே தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications