வட இந்தியாவில் ஒரே வெள்ளமா இருக்கு, சூதானமா இருங்க: அமெரிக்கர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
டெல்லி: வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கிருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியிருப்பதாவது,
உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும், தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளிலும், ஆங்காங்கே சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்றும் பணியிலும் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் வடியும்வரை, உள்கட்டமைப்பு வசதிகள் சரிசெய்யப்படும் வரை தேவையில்லாமல் எந்த ஒரு அமெரிக்க குடிமகனும் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
வெள்ள நிலவரம் குறித்து அறிய உள்ளூர் ஊடகங்களை பார்க்கவும். இதுவரை எந்த ஒரு அமெரிக்க குடிமகனும் இறந்ததாக தகவல் இல்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்ற இந்திய அதிகாரிகளுடன் சேர்ந்து முயற்சித்து வருகிறோம். உத்தரகண்டில் யாராவது அமெரிக்க குடிமகன் சிக்கியிருந்தால் உடனே அமெரிக்க தூதரகத்தை 011-2419-8000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications