நாளை முதல் "நியாயமான விலையில்" காய்கறிகளை விற்பனை செய்ய 31 கடைகள்- முதல்வர் ஜெ. திறக்கிறார்!
சென்னை: சென்னையில் 31 இடங்களில் நியாய விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய கடைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க இருக்கிறார்.
பருவமழை பொய்த்து காய்கறிகள் விளைச்சல் குறைந்த போனதால் வரத்து இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலைகளுமே மிகக் கடுமையாக உயர்ந்தன. இதனால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வெளி சந்தைகளில் காய்கறிகள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், நியாயமான விலையில் தரமான காற்கறிகளை விற்கவும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் 31 இடங்களில் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்திருந்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இந்த காய்கறி கடைகள் திறப்பு விழா நாளை பிற்பகல் நடைபெறுகிறது.
தேனாம்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ் காமதேனு சிறப்பங்காடியில் உள்ள பண்ணை-பசுமை காய்கறி கடையை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டி.யு.சி.எஸ். சிறப்பங்காடியிலும், கீழ்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களிலும், சிந்தாமணி கூட்டுறவு சங்கம் மூலம் அண்ணா நகர், திருமங்கலத்திலும், இப்புதிய காய்கறி கடைகள் திறக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை மூலம் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதியிலும், பார்க்டவு்ன், ரெயின்போ கூட்டுறவு சங்கங்கள் மூலமும் இக்கடைகள் திறக்கப்படுகின்றன. இது தவிர 2 மொபைல் வாகனங்களிலும் காய்கறிகள் குறைந்த விலையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications