குடும்பத் தகராறில் கணவனின் கழுத்தை கேபிள் வயரால் இறுக்கி கொலை செய்த மனைவி கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கணவனின் கழுத்தை கேபிள் வயரால் இறுக்கி கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
புளியங்குடி ஆர்.எஸ்.ஏ.பி., தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(38)கட்டிட தொழிலாளி. இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த குருசாமி மகள் ஜெயகுருவம்மாள் (35) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர்.
கணேசனுக்கும், இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மாரியம்மாள் (30) என்பவரை கணேசன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மாரியம்மாளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணேசன் அடிக்கடி குடித்துவிட்டு முதல் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் 2வது மனைவியுடனேயே அதிக நாட்கள் இருந்ததாக தெரிகிறது. இதனால் முதல் மனைவி வீட்டிற்கு சரியாக வராமலும், குடும்பத்தை கவனிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இது ஜெயாவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மாலை ஜெயா வீட்டிற்கு வந்த கணேசன் அவரிடம் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபமடைந்த ஜெயா அருகில் கிடந்த கேபிள் டிவி வயரை எடுத்து கணேசனின் கழுத்தை நெரித்தார். இதில் உடனடியாக கணேசன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் கணேசன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கணவனை கொலை செய்த ஜெயாவை கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications