மோடி சர்வாதிகாரி.. ராஜ்நாத் சிங் குள்ள நரி - அத்வானியின் உதவியாளர் தாக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி. அதேபோல பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஒரு குள்ள நரி என்று மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளரான சுதீந்திர குல்கர்னி கூறியுள்ளார்.
மோடி- அத்வானி இடையிலான சண்டையில் பெட்ரோலை ஊற்றும் வகையில் இவரது பேச்சு அமைந்துள்ளது.
இதுகுறித்து குல்கர்னி கூறுகையில், பிரதமராக வேண்டும் என்ற கனவு ராஜ்நாத் சிங்குக்கே உண்டு. இதற்காக அவர் ஜோசியம் கூட பார்த்து வருகிறார். அவர் குள்ளநரி போன்றவர்.

ஆனால் 85 வயதான நிலையிலும் கூட அத்வானி இன்னும் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்து வருகிறார். மோடிக்கு எதிராக அத்வானி திரும்பியதில் எந்தத் தவறும் இல்லை.
உண்மையான ஜனநாயக வாதி அத்வானிதான். சர்வாதிகாரி மோடியை நீக்க வேண்டும். மோடிக்காக, அத்வானியை ஓரம் கட்டியது அவமானத்துக்குரியது என்று கடுமையாக சாடியுள்ளார் குல்கர்னி.












Click it and Unblock the Notifications