மேலும் 4 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெ. வை சந்திக்கின்றனர்? போட்டி தேமுதிக உதயம்?

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. இதனால் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். ஆனால் அதிமுகவுடன் முறைத்துக் கொண்டு கூட்டணியை உடைத்துக் கொண்டது தேமுதிக. இருப்பினும் தேமுதிகவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் இதுவரை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதாவை, ‘தொகுதி நலனுக்காக' நேரில் சந்தித்துப் பேசினர். அவர்கள் 7 பேரும் தேமுதிக தலைமைக்கு எதிராக ‘அதிருப்தி' அணியினராக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் 27-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 5 எம்.பி.க்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் 6வது எம்.பி. இடத்துக்கு தேமுதிகவும் திமுகவும் போட்டியிடுகின்றன. இதற்காக இரு கட்சிகளும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற பகீரத பிரயத்னம் செய்கின்றன. இந்நிலையில் அதிமுக வசம் இருக்கும் 7 அதிருப்தி எம்..எல்.ஏக்களையுமே தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்க வைத்து வெற்றி பெறப் போகும் இளங்கோவனை, ஒரு அதிருப்தி எம்.பி.யாக தம் வசம் வைத்துக் கொள்ள அதிமுக முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிகவைச் சேர்ந்த மேலும் 4 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கி உள்ளன. அப்படி 4 எம்.எல்.ஏக்கள், அதிருப்தி அணிக்குத் தாவினால் போட்டி தேமுதிக என்பது இயல்பாக உருவாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இப்படி பரவி வரும் செய்திகளால் தேமுதிக தலைமை கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜ்யசபா தேர்தலில் எத்தனை கிளைமாக்ஸ்களோ?
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications