பொதுத்தேர்வுபொதுத்தேர்வுகளில் முதல் இடம்: மாணவகளில் முதல் இடம்: மாணவர்களுக்கு ஜெயலலிதா ரொக்கப்பரிசு
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா ரொக்கப்பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
மாணவர்களுக்கு பரிசு
2012-2013ம் கல்வியாண்டில் தமிழை மொழிப்பாடமாக கொண்டு 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் எஸ்.ஜெயசூர்யா, எஸ்.அபினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, இரண்டாம் இடம் பெற்ற மாணவர் எஸ்.பழனிராஜ், மாணவி ஆர்.அகல்யா ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெற்ற என்.ஜி.ராஜேஸ்வரி, இ.கலைவாணி, வி.விஷ்ணுவர்தன், ஏ.கே. கண்மணி, யு.மனோதினி, கே.ரவீணா, ஏ.எஸ்.நிவேதிதா, பூஜா எஸ்.குமார், எஸ்.முத்து மணிகண்டன் ஆகிய 9 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு, என மொத்தம் 13 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப்பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

உயர்கல்விச் செலவு
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற எஸ்.அனுசுயா, ஜெ.பி.எம்.தீப்தி, எம்.காயத்திரி, டி.மார்சியாஷெரின், கே.ஆர்.பொன்சிவசங்கரி, சி.எஸ்.சாருமதி, பி.சோனியா, ஆர்.ஸ்ரீதுர்கா, எஸ்.வினுஷா ஆகிய 9 மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு, என மொத்தம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப்பரிசுகளையும் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்.
பரிசு பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
முதல்வர் வாழ்த்து
பின்னர் அவர்களிடையே பேசிய முதல்வர், ஒளிமயமான எதிர்காலம் அமைவதற்கு தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கி, சமுதாய முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற உதவிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து ரொக்கப்பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலாளர் டி.சபீதா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஏ.சரவண வேல்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications