நாங்க காட்டெருமை தர்றோம், நீங்க ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் தாரீங்களா..?: ஜெயலலிதா
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு, ஒற்றை கொம்பு காண்டாமிருகம் தாருங்கள், அதற்குப் பதிலாக நாங்கள் இந்திய காட்டெருமைத் தருகிரோம் என அசாம் முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை, வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்குள்ள பல நாட்டு விலங்கினங்கள் மற்றும் உயிரினங்களைக் காண பொதுமக்கள அதிக அளவில் வந்து செல்கின்றனர். தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இல்லை. எனவே, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருக கேட்டு அசாமுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அசாம் முதலமைச்சர் தருண் கோகாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது....

அதிக விலங்குகள், பறவைகள்...
‘வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 143 வகைகளைச் சேர்ந்த 1400 தனிப்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இவ்வாறு பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளுள், ஒற்றை கொம்புள்ள காண்டாமிருகம் மிகப்பெரிய ஒன்றாகும்.

மாபெரும் விலங்கின் சந்ததி...
இது, 1985-1989 வரையிலான கால அளவில் இப்பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. 1989-ம் ஆண்டில் அந்த காண்டாமிருகம் இறந்துவிட்டது. அதன்பின்னர், எங்களுடைய உயிரியல் பூங்காவில், இத்தகைய மாபெரும் விலங்கின் சந்ததி எதுவும் இப்போது இல்லை.

பார்வையாளர்கள் எண்ணிக்கை....
இந்த உயிரியல் பூங்காவுக்கு வந்து செல்கிற பார்வையாளர்களின் எண்ணிக்கை, இந்திய காண்டாமிருகத்தின் பிரபலத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நாங்கள் பராமரித்து வருகிற விலங்குகளில் இந்த விலங்கு மீண்டும் இடம் பெறுவது பெரிதும் உகந்ததாக இருக்கும்.

காட்டெருமைக்குப் பதில் காண்டாமிருகம்...
எங்களிடம் இந்திய காட்டெருமைகள் போதிய எண்ணிக்கையில் உள்ளன. நாங்கள், ஒற்றை கொம்பு காண்டாமிருகத்திற்கு பதிலாக, பரிமாற்றம் என்ற அடிப்படையில் ஒரு ஜோடி இந்திய காட்டெருமைகளை அசாம் அரசுக்கு வழங்குகிறோம். இந்திய காட்டெருமை உயர்வகை விலங்கின வகைகளுள் ஒன்றாகும்.

ஜெயலலிதா வேண்டுகோள்...
எனவே, ஒரு ஜோடி இந்திய காட்டெருமையை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக, ஒரு ஜோடி பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என இவ்வாறு அக்கடிதத்தில் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications