உத்தர்காண்ட் வெள்ளம், மீட்பு பணிகளில் குறைபாடு இருந்தன: சுஷில்குமார் ஷிண்டே ஒப்புதல்!
Subscribe to Oneindia Tamil

வெள்ளத்தால் உருக்குலைந்து போயிருக்கிறது உத்தர்காண்ட் மாநிலம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
முன்னதாக முதல்வர் விஜய் பகுகுணாவை அவர் நேரில் சந்தித்து ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரகாண்ட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 50ஆயிரம் பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 334 பேரின் கதி குறித்து தெரியவில்லை. தொடக்கத்தில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சில குறைபாடுகள் இருந்த என்றார்.












Click it and Unblock the Notifications