உத்தர்காண்ட் வெள்ளம்..ஜூன் 23 வரை 96,500 பேர் மீட்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
டெல்லி: உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கிய 96,500 பேர் ஜூன் 23-ந் தேதிவரை மீட்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர்காண்ட் வெள்ள மீட்பு த்ஒடர்பாக வழக்கறிஞர் அஜய் பன்சால் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், ரஞ்சன் கோகய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அந்த மனுவில் சில யோசனைகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த யோசனைகளை பரிசீலிக்குமாறு மத்திய மற்றும் உத்தர்காண்ட் அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதனிடையே மத்திய அரசு மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசு மேற்கொண்ட வெள்ள மீட்பு தொடர்பாக அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜூன் 23-ந் தேதி வரை 96,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,189 முறை மீட்பு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து பொதுமக்களை காப்பாற்றியுள்ளன. விமானப் படைக்குச் சொந்தமான விமானம் 419 முறை விமானத்தில் பறந்து மீட்புப் பணிகளை செய்துள்ளது

மீட்கப்பட்ட அனைவரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்டோரை ஹரித்வார் மற்றும் டேராடூன் அழைத்து வர மொத்தம் 4 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 80% தொலைத் தொடர்பு வசதிகள் சீரமைக்கப்பட்டிருக்கின்ற்னா. மீட்புப் பணிகளுக்காக 77 செயற்கைக் கோள் தொலைபேசிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையில், அடுத்த 72 மணி நேரத்தில் மீட்புப் பணிகள் முழுவதும் முடிந்துவிடும். நேற்று வரை பலி எண்ணிக்கை 560 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications