என்.எல்.சியில் ஜூலை 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக முடிவெடுத்துள்ளன.
என்.எல்.சி. நிறுவனத்தின் 5%^ பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று மாலை என்.எல்.சி.யின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இக்கூட்டத்தில் பல கட்ட போராட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கின்றன.
வரும் 27-ந் தேதி முதல் தொழிலாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம், 28,29-ந் தேதிகளில் கோரிக்கைகளை விளக்கி வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. ஜூலை 1-ந் தேதி ஆர்ப்பாட்டம், 2-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஜூலை 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 17 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. என்.எல்.சி.யின் நிரந்தர தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேர், ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் மற்றும் பொறியாளர்கள், அலுவலகர்கள் 4500 பேர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் மின் உற்பத்தியானது கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications