முயல் வேட்டைக்கு அபராதம் கட்டிய கணவன் : மனமுடைந்த மனைவி தற்கொலை
மத்தூர்: முயல் வேட்டைக்குச் சென்ற கணவன் வனத்துறையினரிடம் சிக்கியதால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தங்கமணி (40)யின் மனைவி மணி (35). தங்கமணிக்கு முயல் வேட்டை பிடித்தமான பொழுதுபோக்காம். சம்பவத்தன்றும் தங்கமணி சிங்காரப்பேட்டை காப்புகாட்டில் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அன்று எதிர்பாராத விதமான வனத்துறையினரிடம் சிக்கினார் தங்கமணி. விசாரணையில் அவர் முயல் வேட்டைக்காக வந்ததை ஒப்புக் கொண்டார். இதனால், வனத்துறையினர் தங்கமணிக்கு ரூ. 4500 அபராதம் விதித்துள்ளனர்.
அபராதத்தை கட்டிய தங்கமணி வீட்டிற்கு சென்று மனைவியிடம் தான் வனத்துறையினரிடம் சிக்கிய கதையைக் கூறியுள்ளார். அதனைக் கேட்ட பின், அது சம்பந்தமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகறாரினால் மனமுடைந்த மணி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விவரம் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications