மீட்புப் பணியில் உயிரிழந்த வீரர்கள்: பகுகுனா 10 லட்சம், மோடி 5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

உத்தரகாண்ட் பேரழிவில் சிக்கி உயிருக்கு போராடிய இருபது பேரை மீட்டுச் சென்ற விமானப்ப்டை ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக நேற்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 12 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன.
இச்சோகச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் விஜய் பகுகுனா மீட்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், குஜராத் முதலமைச்சர் மோடி, குஜராத் அரசு சார்பில் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உத்தரகாண்டில் சிக்கித்தவிப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தந்துள்ள வீரர்களுக்கு தலைவணங்கும் எனது அரசு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் உதவி வழங்கும். மேலும் உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications