உத்தரகண்டில் வெள்ளத்தில் சிக்கிய 2,000 பேரை செல்போன் உதவியால் காப்பாற்றிய வாலிபர்
டேராடூன்: உத்தரகண்டில் ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் 2,000 பேரை காப்பாற்றியுள்ளார்.
இன்றைய வாலிபர்கள் எப்பொழுது பார்த்தாலும் செல்போனும் கையுமாக இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் பெற்றோர்கள் அந்த செல்போனில் என்னதான் இருக்குமோ 24 மணிநேரமும் நோண்டிக்கிட்டே இருக்கான் என்று திட்டுவார்கள். இந்நிலையில் ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் 2,000 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஜங்கிள் சாட்டி என்ற பகுதியில் 2,000 பேர் சிக்கிக் கொண்டனர். அப்போது வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் தங்களை மீட்க யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்தனர்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஜெயேஷ் என்ற வாலிபர் தாங்கள் சிக்கிய பகுதியை ஒரு பேப்பரில் வரைந்து அதை தனது செல்போனில் போட்டோ எடுத்து அதை தனது நண்பருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த போட்டோவை அவரது நண்பர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை ஐ.ஜி.யிடம் காண்பித்தார். அந்த படத்தை வைத்து மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று அங்கு சிக்கியிருந்தவர்களை மீட்டனர். ஜெயேஷின் சமயோஜித புத்தியை மீட்பு பணியினர் பாராட்டினர்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications