'கனிமொழியின் வெற்றிக்கு மறைமுகமாய் உதவிய ஜெயலலிதா': விஜயகாந்த் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றிக்கு முதல்வர் ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு அளித்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக பல வகைகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஏனெனில் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வியடைய வேண்டும் என்பதில்தான் ஆளும் அதிமுக அரசு அதிக ஆர்வம் காட்டியது. அதிமுக முதலில் 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டு, பின்னர் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அதிமுக தனது வேட்பாளரை வாபஸ் பெற செய்து, அந்த ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம் மறைமுகமாக தி.மு.கவை ஆளும் அதிமுக அரசு வெற்றி பெறச் செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

தேமுதிகவின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாத அதிமுக தலைமை இந்தச் செயல்
மூலம் எம்ஜிஆரின் எதிரிக் கட்சியான திமுகவை வெற்றிபெற செய்வது
எம்ஜிஆருக்கு இவர்கள் காட்டும் விசுவாசமா..? என்று எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

திமுக-அதிமுக ரகசிய உடன்பாடு:

திமுக-அதிமுக ரகசிய உடன்பாடு:

ஆளும் அதிமுக அரசு நினைத்திருந்தால் தன்னுடைய வாக்குகள் மற்றும் அவர்கள் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மூலம் வெகு சுலபமாக திமுகவை தோல்வியடையச் செய்திருக்க முடியும். திமுக வெற்றியின் மூலம் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வெளியில் தங்களை எதிரிகளைப் போல் காட்டிக் கொண்டாலும், திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக செய்த தவறுகளை கண்டு கொள்ளாமலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக செய்த தவறுகளை கண்டும், காணாததும் போல் இருப்பதும் மறைமுகமாக இரண்டு கட்சிகளுக்கும் ரகசிய உடன்பாடு கொண்டு உள்ளனவோ என்ற சந்தேகம் வலுப்பெறவே வழி செய்கிறது.

பெங்களூர் ஊழல் வழக்கு...

பெங்களூர் ஊழல் வழக்கு...

2ஜி வழக்கில் ரூ. 1,76,000 கோடி ஊழல் நடந்தபோது கடுமையாக கனிமொழியையும், திமுகவையும் விமர்ச்சித்த ஜெயலலிதா மறைமுகமாக கனிமொழியின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஏன்? ஒருவேளை தன் மீதும் ஊழல் வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நடப்பதன் எதிரொலியாக இருக்குமோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தத் தேர்தலின் மூலம் பலரின் முகத்திரை கிழிக்கப்பட்டு, உண்மை சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தொகுதியின் மேம்பாட்டிற்கும், தொகுதி மக்களின் நலன் கருதிதான் முதல்வரை சந்தித்தோம் என்று கூறியவர்களின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் தொகுதி பிரச்சனைகளுக்காகத்தான் அந்த எம்.எல்.ஏக்களை சந்தித்தேன் என்ற முதல்வரின் உள்நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது.

பசுத்தோல் போர்த்திய புலிகளாக...

பசுத்தோல் போர்த்திய புலிகளாக...

இத்தனை நாள் தங்கள் சுய லாபத்திற்காக தொகுதியையும், தொகுதி மக்களையும் தங்கள் பதவியின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியவர்களின் வஞ்சக எண்ணத்தையும், குறுகிய மனப்பான்மையையும் கொண்டு, பசுத்தோல் போர்த்திய புலிகளாக வலம் வந்தவர்களை இப்போது அந்த தொகுதிகளின் மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

மன்னிக்க முடியாத துரோகிகள்...

மன்னிக்க முடியாத துரோகிகள்...

தங்களுக்கு அரசியலில் முகவரி கொடுத்து, அடையாளம் காண்பித்த தன் கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்து விட்டு, மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகிகள் இவர்கள் என்பதனை வருங்காலம் உணர்த்தும். தாங்கள் ஏதோ சாதனை செய்து விட்டதைப் போல் இறுமாப்புடன் இருக்கும் இவர்களுக்கு, இது சாதனை அல்ல, சந்தி சிரிக்கும் செயல் என்று அவர்களின் தொகுதி மக்களே வெகு விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

சுய விளம்பரத்திற்காக...

சுய விளம்பரத்திற்காக...

முதல்வரை சந்தித்த பின், தங்கள் தொகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு பல திட்டங்கள் நடைபெறுவதாக இவர்கள் கூறியதை மக்கள் யாரும் மறந்து விடவில்லை. உண்மையில் அந்த தொகுதிகளுக்கு எல்லா திட்டங்களும் நிறைவேறுகிறது என்றால், உண்மையில் சந்தோஷப்படும் முதல் கட்சி தே.மு.தி.கவாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாமல் வெறும் சுய விளம்பரத்திற்காக கூறப்பட்டவை என்றால் அவர்களோடு சேர்த்து ஆளும் அதிமுக அரசுக்கும் நீக்க முடியாத கரும்புள்ளியை மக்கள் தருவார்கள் என்று கூறிக் கொள்கிறேன்.

எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி....

எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி....

தேமுதிகவை பொறுத்த வரையில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தேர்தல் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்டு, சில சட்டமன்ற உறுப்பினர்களை தவிர, மற்ற அனைவரும் முதன் முறையாக மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க வைத்ததே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.

22 எம்எல்ஏக்களுக்கும் நன்றி...

22 எம்எல்ஏக்களுக்கும் நன்றி...

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடங்கி இந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தனது ஜனநாயக கடமையை தனக்கே உரிய பாணியில் கம்பீரத்தோடு எதிர்கொண்டு பணத்திற்கோ, பாசாங்கிற்கோ இடமளிக்காமல் மக்கள் பணி ஒன்றே எங்கள் கொள்கை, எங்கள் லட்சியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்படும் எங்களுக்கு இந்த ஒரு மாநிலங்களவை தேர்தல் தே.மு.தி.கவை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை தெரிவித்துக் கொண்டு, வாக்களித்த 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க. தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

சோதனைகளை, சாதனைகளாக்கி..

சோதனைகளை, சாதனைகளாக்கி..

அதே நேரத்தில் அரசியலில் ஏற்படும் சூழ்ச்சிகளை கண்டு சற்றும் கவலைப்படாமல் அதை முறியடிக்கும் சக்தி கொண்டது தே.மு.தி.க. என்பதை வருங்காலத்தில் தமிழக மக்களோடு சேர்ந்து தனது வெற்றியை நிலை நிறுத்தும் தே.மு.தி.க. ஆரம்பிக்கப்பட்டதன் உயரிய நோக்கம் நிறைவேறும் வரை தனது அரசியல் பயணத்தில் சற்றும் சளைக்காமல், தலைவர் மீதும், கட்சி தலைமையின் மீதும் மாறாத பற்றும், உண்மையான விசுவாசமும், நம்பிக்கையும் உடைய தொண்டர்களின் பலத்தோடும், பொதுமக்களின் ஆதரவோடும் சோதனைகளை, சாதனைகளாக்கிக் காட்டுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+