சென்னை ஆழ்வார் பேட்டையில் நிர்வாணத் திருடன் அட்டகாசம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு நபர் இரவு நேரங்களில் ஆடையின்றி உலவி வருகிறார். இந்த நபர், சமையல் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்வதும் ரகசிய கேமராக்களில் பதிவாகியுள்ளது.
சென்னை மாநாகரின் மையத்தில் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் முக்கிய குடியிருப்பு பகுதியில் ஆடையின்றி திருடன் ஒருவன் இரவு முழுவதும் உலாவருவது கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தெரியவந்தது. இந்த திருடன் முதலில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வருகிறான். பின்னர் அனைத்தையும் முழுதாக கழற்றிவிட்டு ஹாயாக சுற்றி வருகிறான்.
வீடுகளுக்கு வெளியில் கிடக்கும் பொருட்களை அப்படியே தூக்கிச்சென்றுவிடுகிறான். வீட்டு சமையலுக்கு பயன் படுத்தப்படும் சிலிண்டர் கூட இந்த திருடனிடம் இருந்து தப்புவதில்லை. இவை அணைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியிருக்கிறது.
இந்த திருடனின் தொல்லையைத் தாங்க முடியாத குடியிருப்புவாசிகள் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசாரின் வலையில் அந்த திருடன் இன்னும் சிக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த பகுதியில் செயல்பட்டுவந்த இலங்கை துணை தூதரகம் கடந்த ஆகஸ்ட் மாதம் நுங்கம்பாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதற்கு பிறகு இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதனால் தான், இந்த திருடன் தைரியமாக உலா வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த திருடன் ஏற்கனவே பார்த்தசாரதி தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தவர் என்று சொல்லப்படுகிறது. அந்த பகுதி நன்கு அறிமுகமானதால், தைரியமாக உலா வருவதாகவும் இந்த பகுதியினர் தெரிவிக்கிறனர்.
டி.டி.கே சாலையில் இருந்து சற்று தொலைவில்தான் மாநில முதல்வர் ஜெயலலிதாவின் வீடு உள்ளது. அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடும் சற்று தொலைவில்தான் உள்ளது. எனினும் இப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இரவு நேர ரோந்துப்பணிகளை பலப்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications