எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு அனுமதிப்பதா?: வைகோ கண்டனம்
சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொள்ளை லாபம் சம்பாதிக்க மத்திய அரசு அனுமதித்துவிட்டு பொதுமக்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசினுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ரூபாயின் மதிப்பும் குறைந்து மிகக் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பண்டங்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களும், மாத ஊதியம் வாங்குவோரும், அடித்தட்டு மக்களும், தினக்கூலி வாழ்வு நடத்தும் ஏழைகளும் இந்த விலைவாசி உயர்வால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோலின் விலை ஜூன் ஒன்றாம் தேதி லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டது. ஜூன் 15-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஜூன் 28-ஆம் தேதி மூன்றாவது முறையாக லிட்டருக்கு ரூ.1.82 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதில் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரியைச் சேர்க்கும்போது விலை இன்னும் அதிகமாகும். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.71-க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கான ரூபாய் மதிப்பு குறைந்ததுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது. அந்த மதிப்பு கூடுவதும் குறைவதும் சராசரியாக நடக்கக் கூடியதுதான். எண்ணெய் நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொள்ளை லாபம் சம்பாதிக்க மத்திய அரசு அனுமதித்துவிட்டு பொதுமக்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications