இமயமலை சுனாமி, சுமார் 10000 மக்கள் பலியாகியிருக்கலாம்: உத்தரகாண்ட் சபாநாயகர்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்டில் வெள்ளபாதிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டும் என அம்மாநில சபாநாயகர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரகாண்டில் கனமழையும் அதனைத் தொடர்ந்து வெள்ளபாதிப்பு மற்றும் நிலச் சரிவும் ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் பாதிக்கப்பட்டனர்.

அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று மீட்புப் பணிகளை ஆய்விட வந்த உத்தரகாண்ட் சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் ‘ பேரழிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும் என தெரிவித்தார்.

Over 10,000 people may be perished: Uttarakhand assembly speaker

மேலும், அவர் கூறியதாவது,‘ கர்வால் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது அங்கு மட்டும் சாவு எண்ணிக்கை 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை இருக்கும் என்று நம்பினேன். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. எனவே, தற்போதுள்ள நிலவரப்படி பார்த்தால், வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்.

தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆங்காங்கே கிடக்கும் உடல்களை உடனடியாக அப்புறப்படுத்த அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+