என்ன பண்ணலாம்?... காங். தலைவர்களுடன் ரூமை பூட்டிக் கொண்டு வாஸ்னிக் ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

Mukul Wasnik visits Sathyamurthy bhavan
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியை எப்படி வளர்க்கலாம், நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகுல் வாஸ்னிக், சென்னை சத்தியமூர்த்தி பவனில் பூட்டிய அறைக்குள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை நடந்த 2 மணி நேரமும் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக முகுல் வாஸ்னிக்கை மேலிடம் நியமித்துள்ளது. இவர் இன்று சென்னை வந்தார். அவருக்கு கோஷ்டி கோஷ்டியாக காங்கிரஸார் வரவேற்பு அளித்தனர்.

சத்தியமூர்த்தி பவனில் பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் வாஸ்னிக் ஆலோசனை நடத்தினார். மாநில தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், அகில இந்திய செயலாளர்கள் சின்னாரெட்டி, சத்தீசன், திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லக்குமார், முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.,

நாடாளுமன்றத் தேர்தல் உத்தி, கூட்டணி, கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டதாம்.

அறையைப் பூட்டிக் கொண்டு 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார் வாஸ்னிக்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+