எங்க 'பாஸ்' எப்பவுமே 'லேட்'டுதான்... மைக்கேல் ராயப்பன் நக்கல்!
சென்னை: விஜயகாந்த் எந்த முடிவையும் உடனடியாக, விரைவாக எடுக்க மாட்டார் என்பதற்கு எங்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதே மிகச் சரியான உதாரணமாகும் என்று அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் தேமுதிகவின் பலம் 29 ஆக இருந்தது. இதில் மாபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தரராஜன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 7 பேரும் பிரிந்து சென்று செயல்பட்டு வருகிறார்கள்.
ராஜ்யசபா தேர்தலில் இந்த 7 பேரும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தார் விஜயகாந்த்.

அதாச்சு பல மாசம்
இதுகுறித்து மைக்கேல் ராயப்பன் கூறுகையில், அதிருப்தியாக நாங்கள் செயல்பட தொடங்கி பல மாதங்கள் ஆகிறது. இப்போதுதான் நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.

எதையுமே வேகமாக எடுக்க மாட்டார்
எந்த முடிவையும் விஜயகாந்த் வேகமாக எடுக்க மாட்டார் என்பதற்கு இதுவே உதாரணம்.

ஏன் தயக்கம்
உதிர்ந்த ரோமம் என்றெல்லாம் எங்களை வர்ணித்தார்கள். கட்சியில் இருந்து எங்களை நீக்குவதற்கு தயக்கம் ஏன்?

ஓரேயடியா நீக்கிருங்களேன்
தற்காலிக நீக்கமே மகிழ்ச்சி அளிக்கிறது. நிரந்தரமாக நீக்கினால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.

திணறுகிறாரே...
முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த நாடகத்தை முடித்து வைப்பேன் என்றார் விஜயகாந்த். இதுவரை முடிக்க முடியாமல் திணறுகிறார்.
எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும் என்பதற்காகத்தான் எங்களை கட்சியில் இருந்து நீக்காமல் இருக்கிறார். எதையும் சுய நலத்தோடுதான் சிந்திப்பார் என்றார் ராயப்பன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications