விஜயகாந்துக்கு முதல்வராகும் ஆற்றலும், துணிவும் இல்லை: சரத்குமார்
Subscribe to Oneindia Tamil

குமரி மாவட்ட சமக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் கடந்த சனிக்கிழமை நடந்தது. கிழக்கு மாவட்டச் செயலர் அரசன் பொன்ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 28ம் தேதி சென்னையில் நடக்கும் கட்சியின் முப்பெரும் விழாவில் குமரி மாவட்ட தொண்டரக்ள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது கட்சியின் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வராகும் ஆசை உள்ளது. ஆனால் அவரால் முதல்வராக முடியாது. ஏனென்றால் அவருக்கு முதல்வராவதற்கான ஆற்றலும், துணிவும் இல்லை. தமிழகத்தில் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சிக்கு நாம் உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications