உத்தர்காண்ட் வெள்ளம்.. உக்கிரமாக ட்விட்டரில் மோதும் காங்கிரஸ், பாஜக தலைவர்கள்!
டெல்லி: உத்தர்காண்ட் வெள்ள பாதிப்பு விவகாரம் இப்போது ட்விட்டரில் பெரும் சண்டையாகவே உருவெடுத்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் காட்டமாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
உத்தர்காண்ட் வெள்ளத்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட வேண்டியது இருக்கிறது என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுஒருபுறம் இருக்க இந்த விவகாரமே ஒரு அரசியல் சர்ச்சையாகவும் உருமாறியிருக்கிறது.

மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கத்தில், பேரழிவால் பாதிக்கப்பட்ட உத்தர்காண்ட் பகுதிகளை பார்வையிடாத கட்சியினர் காங்கிரஸ் தலைவர்களை குறை கூறுகின்றனர். சிபிஐக்கு கூடுதல் சுதந்திரம் கொடுப்பது தொடர்பான அரசின் பரிந்துரைகளை விமர்சிக்க நேரம் கிடைக்கிறது.. ஆனால் உத்தர்காண்ட் போகமுடியவில்லையோ என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பாஜக மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வாராஜோ, நாங்கள் உத்தர்காண்ட் போகவில்லைதான். ஏனெனில் உள்துறை அமைச்சர்தான் நாங்கள் அங்கு சென்றால் மீட்பு பணிகள் பாதிக்கும் என்று கூறியிருந்தார். அவர் உட்பட எவருமே எங்கும் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் பற்றி ஜூன் 18-ந் தேதியே உள்துறை அமைச்சரிடமும் பேசி இருக்கிறேன்.. ட்விட்டரிலும் பதிவு போட்டிருக்கிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
அத்துடன் உங்கள் மாநில அரசு என்ன செய்தது? ஒன்றுமே செய்யவில்லை. அனைத்துமே ராணுவம் செய்தது. அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு எனது வணக்கங்கள். பட்டினியால் மக்கள் வாடுகின்றனர். இறந்தவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படுகிறது என்று காட்டம் காட்டியிருக்கிறார்.
இதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கானும் ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார். உத்தர்காண்ட்டில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. இயற்கை சீற்றத்தை அரசியலாக்கிவிடாதீர்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
அக்கப்போர் என்பது இதுதானோ!
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications