உத்தரகாண்ட் அரசை டிஸ்மிஸ் செய்க: டுவிட்டரில் கொதித்த சுஷ்மா
டெல்லி: உத்தரகாண்டில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை சரிவர கையாள தவறிய அம்மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு நிவாரணப்பணிகள் செய்வது தொடர்வது, பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே டுவிட்டர் தளம் மூலம் மோதல் வெடித்துள்ளது.
மத்திய அமைச்சர் மணீஷ் திவாரிதான் முதலில் பிரச்னையை கிளப்பினார். அவர் தனது டுவிட்டர் தளத்தில், "பா.ஜனதா தலைவர்கள் சுஷ்மா சுவராஜுக்கும், அருண்ஜெட்லி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலம் சென்று எட்டிகூட பார்க்கவில்லை, அவர்களுக்கு சி.பி.ஐ.க்கு சுயாட்சி கொடுத்தது பற்றி பேசவே நேரம் உள்ளது. என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தனது டுவிட்டர் தளத்தில் பதிலடி கொடுத்த சுஷ்மா ஸ்வராஜ், வி.ஐ.பி.க்கள் உத்தரகாண்டுக்கு இப்போது சென்றால் மீட்புப் பணிகள் பாதிக்கும் என்று உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறி இருந்தார். எனவேதான் நாங்கள் உத்தரகாண்டுக்கு செல்லவில்லை. மீட்புப் பணிகளை செய்ய காங்கிரஸ் கட்சியை எழுப்பிவிட்டதே பா.ஜனதாதான்" என்று குறிப்பிட்டிருந்தார்.
உத்தரகாண்ட் மீட்பு நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசியல் ஆக்குகிறது என்று மனீஷ் திவாரி கூறியிருந்தார்.
இதைக் கண்டு கொதித்த, சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரசை கடுமையாக தாக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். நாடு இன்று ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளது. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் உத்தரகாண்ட் சம்பவத்துக்கு உதவிகள் செய்ய எந்த ஒரு நாடும் முன்வரவில்லை".
"பேரழிவு ஏற்பட்டுள்ள உத்தரகாண்ட்டில் மக்கள் பசி பட்டினியுடன் கிடக்கிறார்கள். பலியானவர்கள் உடலில் உள்ள நகைகளை வெட்டி எடுத்து செல்கிறார்கள். உத்தரகாண்ட் மாநில அரசு இதை தடுக்க வேண்டாமா? அம்மாநில அரசு என்ன செய்துள்ளது? ஒன்றுமில்லை.
உத்தரகாண்ட் மாநில அரசு செயலற்றதாக உள்ளது. இந்த துரதிர்ஷ்ட நிலையை ஏற்க இயலாது. எனவே உடனடியாக உத்தரகாண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பொரிந்து தள்ளியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications